முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க உரை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.
இந்த விசேட உரையில் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் அவர் வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதுடன் அவர் தேசியப்பட்டியலிலோ அல்லது பாராளுமன்றத்திலோ வர மாட்டார் என்பதுடன் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் அணியை வழிநடத்திச் செல்கிறார்.