காஸா பகுதியில் பலஸ்தீன மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கொமேனி இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஸாவில் உள்ள அல் அஹில் மருத்துவமனையில் இஸ்ரேலிய விமானப்படை குண்டுவீசி 500 பலஸ்தீனியர்களைக் கொன்ற பின்னர் ஈரானின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன குடிமக்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டால், இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரானின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.