சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று சாதனைப் படைப்பாரா இலங்கை தமிழர்!

0
81

எதிர்வரும் 22 ஆம் திகதி சுவீஸ் நாட்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழரான சந்தியாப்பிள்ளை கெப்ரியேல் போட்டியிடுகிறார்.

இவர் இலங்கையின் மன்னார் – பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.    

இவர் சுவிஸ் நாட்டில் 1989 ஆம் அண்டு முதல் 25 வருடங்கள் ஆண் தாதியாக வைத்தியசாலையில் கடமைபுரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்க அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக 1990 ஆம் அண்டு முதல் கடமை புரிந்து வரும் இவர் நகர சபை உறுப்பினராக 2016 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இருந்து வருகின்றார். சுவிஸ் தேர்தலில் வெற்றிப் பெற்றால் சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு  தெரிவாகும் முதல் தமிழராக வரலாற்றில் இடம் பிடிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here