பேராதனையில் மாணவர்கள் மீது தாக்குதல், 8 பேர் வைத்தியசாலையில்

0
194

சமூக ஊடக தணிக்கைச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், இலவசக் கல்வி, மருத்துவப் பட்டங்களை விற்கும் அரசின் சதியை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு பேரணியாக பேராதனை விடுதிக்கு அருகில் வந்தபோது, நூற்றுக்கணக்கான பொலிஸார் வீதியை மறித்து மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக சுமார் 08 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here