ஏ9 வீதியில் பேருந்து விபத்து; 15 பேர் வைத்தியசாலையில்

0
145

அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இன்று (18) விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏ9 வீதியின் 105 மற்றும் 106 ஆவது கிலோமீற்றருக்கு இடையில் குறித்த பேருந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த பயணிகள் மரதன்கடவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் இருந்த பலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்தில் காயமடைந்தவர்களில் இரு பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளுக்காக பேருந்தின் சாரதி மரதன்கடவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாரதி மீரிகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here