தீவிர போருக்கு மத்தியில் இஸ்ரேல் வந்தடைந்த பைடன்

0
70
U.S. President Joe Biden is welcomed by Israeli Prime Minster Benjamin Netanyahu, as he visits Israel amid the ongoing conflict between Israel and Hamas, in Tel Aviv, Israel, October 18, 2023. REUTERS/Evelyn Hockstein

இஸ்ரேலுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று காலை இஸ்ரேலை வந்தடைந்ததுடன், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ஆம் திகதி திடீரென யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். மேலும், 100 க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதனால் இஸ்ரேல் ஹமாஸ் மீது போரை அறிவித்து, காஸா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எந்தவித தொய்வும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஏவுகணை தாக்குதல் மட்டுமே நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழியாகவும் தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாாிபதி ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார்.

ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின்போது இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என பைடன் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இஸ்ரேல் வந்துள்ளார்.

இருவரின் சந்திப்பின்போது, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில்,” அக்டோர்பர் 7ஆம் திகதி ஹமாஸ் 1,400 இஸ்ரேல் மக்களை கொன்றுள்ளது. ஹமாஸ் அமைப்பு குழந்தைகளை கூட கொன்றுள்ளது. ஹமாஸ் அமைப்பு ஐஎஸ் அமைப்பைவிட மோசமானது.

இந்த சூழலிலும் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல் வந்தததற்கு இஸ்ரேல் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இஸ்ரேல் மக்களுக்கு அமெரிக்கா தற்போது உற்றநண்பனாக துணை நிற்கிறது.

காஸாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக மிகவும் வேதனை அடைந்தேன். ஆனால், இப்போது அதை பார்க்கும்போது அந்த தாக்குதல் வேறு சிலரால் நடத்தப்பட்டதாக அறிகிறேன். ஹமாஸை வீழ்த்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், “இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும்” என்று ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், ஜோ பைடன் மேலும் கூறுகையில்,” ஹமாஸ் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும், 31 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் பிணைக் கைதிகளாக பொது மக்களையும், குழந்தைகளையும் கூட வைத்துள்ளனர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here