கொழும்பு துறைமுகத்திற்கு வந்த இந்திய போர்க்கப்பல்

Date:

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Iravat’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கடற்படை சம்பிரதாயத்திற்கு அமைய இந்த கப்பல் வரவேற்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

124.8 மீட்டர் நீளமும், மொத்தம் 170 பணியாளர்களுடன் ‘INS Iravat’ என்ற இந்த போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலின் கட்டளைத் தளபதி கமாண்டர் ரிந்து பாபுவுக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இன்று காலை இடம்பெற்றது.

மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

‘INS Iravat’ என்ற கப்பல் நாட்டில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கப்பலில் வந்த கடற்படையினர் நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இந்திய கப்பல் இன்று (19) நாட்டில் இருந்து புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த...

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...