விஜயகலா மகேஸ்வரன் விடுதலை!

0
180

விடுதலைப் புலிகளின் (தமிழீழ விடுதலைப் புலிகள்) மறுமலர்ச்சியை ஆதரித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்ததாக கூறப்படும் கருத்து தொடர்பான வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றின் போது அப்போதைய சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரையில் இருந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு (OCPD) இந்த விடயத்தில் விசாரணையைத் தொடங்கியது.  இது அக்டோபர் 8, 2018 அன்று அவர் கைது செய்ய வழிவகுத்தது. இருந்தபோதிலும், அதே நாளில் அவருக்கு ரூ. 500,000 தனிநபர் பிணை வழங்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன், இந்த சர்ச்சையை அடுத்து சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here