நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கே வெற்றி

Date:

நாட்டில் இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கே வெற்றி கிடைத்துள்ளதாக சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, கட்சிக்குள் ஏற்படும் பாதிப்புகள் பற்றி சிந்திக்காமல் எப்போதும் நாட்டின் நலனுக்காக சிந்தித்து மறுசீரமைப்பை மேற்கொள்ளும் கட்சி என்றே கூற முடியும் என காரியவசம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தனித்துப் போராடுவதாகவும் எதிரணி அரசியல் குழுக்கள் அவரது காலை இழுப்பதாகவும் தெரிகிறது என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும், நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, கட்சியின் சிறப்பு மாநாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் அனுமதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்...

செம்மணிப் பேரவலம்! தீவிரமடையும் அகழ்வுப் பணிகள்

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித...

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...