செங்கோலை அவமதித்த அஜித் மானப்பெரும சபையில் இருந்து விரட்டி அடிப்பு!  

Date:

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும பாராளுமன்ற அவையில் இருந்த போது செங்கோலை தொட்டதன் காரணமாக 4 வாரங்களுக்கு பாராளுமன்ற சேவையை இடைநிறுத்துவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபைக்குள் இருக்கும் போது செங்கோலை தொடுவது பாரிய ஒழுக்கக் கேடான செயலாகும் என தெரிவித்த சபாநாயகர், அதனடிப்படையில் இன்று (19) முதல் நான்கு வார காலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிலையியற் கட்டளைகளுக்கு அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்கமான முறையில் செயற்பட வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், வாய்மூல கேள்விகளின் போது ஏற்பட்ட பதற்ற சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கவும் ஏற்பாடு செய்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...