இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுப்பதில்லை

0
152

இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. மேலும் வலியுறுத்தியதாவது,

இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துமாறு பல சந்தர்ப்பங்களில் கடற்படையினருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீன்வளங்கள் அழிந்துப்போவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் இல்லாதொழிக்கப்படுகிறது.

இதை தடுக்க வேண்டுமென நாம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். ஆனால், கடற்றொழில் அமைச்சும் அரசாங்கமும் இதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை.

எமது மீனவர்கள் கடலுக்குச் சென்றால் அங்கு இந்திய இழுவைப்படகுகளும் அவர்களது வலைகளும் இருக்கின்றன. இதுதொடர்பில் கடற்றொழில் அமைச்சருக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவித்திருந்தேன்.

ஒருசில மீனவர்கள் கைதுசெய்யப்படுவதுடன், அவர்களது படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. கைதுசெய்யப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இருதரப்பினரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும்.

இந்திய இழுவைப்படகுகளை எமது கடல் எல்லைக்குள் வராது தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here