விசேட வர்த்தக பண்ட வரி அறவீடா? அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

0
177

ஐந்து வகையான பொருட்களுக்குப் புதிய விசேட வர்த்தகப் பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான பிரசாரம் தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் புதிதாக வரி விதிப்பு ஒன்று மேற்கொள்ளவில்லை எனவும், இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு 25 சதவீத மானிய வரி அவ்வாறே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு மீன்பிடித் தொழிலையும், பழ விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில், அந்நிய செலாவணியைக் கருத்தில் கொண்டு ஏனைய 4 பொருட்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வரி விதிப்புக்கள் அதே போன்று நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

2023 ஒக்டோபர் மாதம் 14 திகதியிட்ட இல. 2353/77 வர்த்தமானி அறிவித்தலின் ஒரு வருட செல்லுபடியாகும் காலம் 2024 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியுடன் முடிவடைந்ததால், அதனை 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் இல. 2406/02 ஊடாக மீண்டும் அதேவாறு 2024 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here