கண்டி – அக்குரணை, குருகொட சந்திப் பகுதியில் சிமெந்து கலவை இயந்திரம் பல வாகனங்கள் மீதும், வீதியில் பயணித்த சிலர் மீதும் மோதியதில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஏற்பட்ட காயங்கள், உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.





