பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இனிமேல் சேவையை நீடிக்க வேண்டாம் என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி அண்மையில் விக்ரமரத்னவிற்கு மூன்று வார கால சேவை நீடிப்பு வழங்கியது. இது அவர் பெற்ற மூன்றாவது சேவை நீடிப்பு ஆகும்.
அரசியலமைப்புச் சபையினால் சேவை நீடிப்புக்கு அங்கீகாரம் வழங்காததன் மூலம் ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு சபைக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், புதிய பொலிஸ் மா அதிபர் விரைவில் நியமிக்கப்படுவார் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.