‘இந்திய வம்சாவளி’ என்பதற்கு தடை இல்லை – இதொகா தலைவருக்கு பதிவாளர் நாயகம் கடிதம்

0
234

மலையக மக்கள் தங்களது இன அடையாளத்தை இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்ற ஒப்புதல் கடிதத்தை அனுப்பி இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மக்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் ஒருபோதும் நிராகரிக்கப்பட மாட்டாதென பதிவாளர் நாயகம் கூறியுள்ளார்.

பிறப்புச் சான்றிதழ் வழங்கும் போது பெற்றோர் முன்வைக்கும் தகவலுக்கு அமையவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி பதிவாளர் நாயகத்தால் வெளியிட்ட சுற்றுநிரூபத்த்திற்கு இ.தொ.கா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்த்திற்கு இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுச் சென்றும் இருந்தனர்.

இந்நிலையில் இ.தொ.காவின் தொடர் அழுத்தத்தினால் மீண்டும் இந்திய வம்சாவளி என்று குறிப்பிடுவதில் தடை இல்லை எனவும் இது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் எனவும் பதிவாளர் நாயகம் இதொகா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

கடிதம் கீழே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here