அரசாங்கத்தின் மீது சஜித் குற்றச்சாட்டு

0
206

தற்போதைய அரசாங்கம் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியாமல் பொருளாதாரக் கொள்கையை வினைத்திறனற்ற முறையில் குறுகிய காலத்தில் முன்னெடுத்துச் செல்வதால், உணவு, பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் வாழ்கின்றனர். வாழத்தகுந்த நாட்டை உருவாக்குவோம் என தேர்தல்களின் போது வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் போது மக்கள் வாழ முடியாது என பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

வருமானம் குறைந்து, மக்களின் வாழ்க்கை சிரமமாகிவிட்ட நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், குறைந்த விலையில் அந்த உணவுப் பொருட்களைப் பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவிசாவளையில் இன்று (24) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து சமகி ஜன பலவேக மற்றும் சமகி ஜன கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தக்கூடிய வலுவான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும், 220 இலட்சம் மக்களின் நலனுக்காக நல்லாட்சி அமுல்படுத்தப்படும், அத்தியவசிய உணவைப் பெறும் சகாப்தம் உருவாக்கப்படும் என சஜித் பிரேமதாச அங்கு தெரிவித்தார்.

மேலும், மக்களின் ஆசியைப் பெறுவதற்காக பொய்யுரைக்காமல் வளமான நாட்டையும் எதிர்காலத்தையும் உருவாக்கி, ஊழல், திருட்டு இல்லாத நாட்டை உருவாக்க பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here