அவுஸ்திரேலிய அணியிடம் தோற்றது இலங்கை

Date:

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 20-20 உலகக்கிண்ணப் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்களைப் பெற்றது.

பதில் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் அந்த இலக்கை கடந்தது.

தொடக்கத்தில் அவுஸ்திரேலிய இன்னிங்ஸ் சற்று மந்தமாக இருந்தாலும், இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடி இந்த வெற்றியை பெற்றனர்.

அவுஸ்திரேலியா அணிக்காக மிக வேகமாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸ் 18 பந்துகளில் 6 அபாரமான சிக்ஸர்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய இன்னிங்ஸ் முழுவதும் பத்து சிக்ஸர்கள் பதிவானதுடன், இலங்கை இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே பதிவாகின.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...