ராஜாங்கனே சத்தரதன தேரரை கைது செய்ய உத்தரவு

0
61

ராஜாங்கனே சத்தரதன தேரரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்புவது தொடர்பில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தேரர் நீதிமன்றில் ஆஜராகாதமையே இதற்குக் காரணம்.

இந்த வழக்கில் ராஜாங்கனே சதாரதன தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இருந்த போதிலும் தேரர் இன்று நீதிமன்றில் ஆஜராகாததால் நீதவான் பிடியாணை பிறப்பித்ததுடன் தேரர்க்கு வெளிநாடு செல்ல தடை விதித்து குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ராஜாங்கனே சத்தாரதன தேரருக்கு கிடைத்த பணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here