கூட்டமைப்பாகச் செயற்பட்ட தமிழ்க் கட்சிகள் ஏன் பிரிந்து நிற்கின்றன? கஜேந்திரகுமாரிடம் வினவிய அமெரிக்கத் தூதுவர்  

Date:

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட தமிழ்க் கட்சிகள் ஏன் பிரிந்து நிற்கின்றன? இவர்களால் ஒற்றுமையாகச் செயற்பட முடியாதா? அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?”

– இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், “எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றையாட்சி மற்றும் 13 ஆவது திருத்தம் போன்ற விடயங்களால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிய வேண்டி வந்தது. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்ந்தும் இறுக்கமாக இருந்து வருகின்றோம். ஆனால், மற்றக் கட்சிகள் ஏன் பிரிந்து நிற்கின்றன என்பது எங்களுக்கும் விளங்கவில்லை.

கொள்கையளவில் இவர்களுக்கிடையில் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. ஆனாலும், அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை அவர்களிடத்தேதான் நேரடியாகக் கேட்க வேண்டும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...