பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசேட அதிரடிப்படையும் பணியில்

Date:

சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு பணியில் பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அறுகம்பே, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அறுகம்பேயில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கைதான மூவரும் கொழும்பு, மாவனல்லை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...