ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

0
302

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக வரும் புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கு, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரசு நிதியில் இருந்து ரூபாய் 166 இலட்சம் தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை CID அதிகாரிகள், அவரது மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அன்று காலை சுமார் 9.00 மணியளவில், மால்பாதையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் தனியார் இல்லத்திற்கு சென்ற CID அதிகாரிகள், பிற்பகல் 3.00 மணி வரை அங்கு தங்கி விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here