காஸாவிற்கு எலோன் மஸ்க் ஆதரவு

0
50

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், காஸா பகுதியில் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் காணி உறவுகளுக்கு தற்போது அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது தனக்கு தெரியாது என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000ஐ தாண்டியுள்ளது.

இஸ்ரேலின் வான் மற்றும் தரைத் தாக்குதல்களால் காஸா பகுதியில் மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

காஸா மக்கள் தற்போது உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here