லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

0
725

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக 60% ஆன பங்களிப்பைப் பெற்றுத் தருகின்றனர்.

தேயிலைத் தோட்ட காணிகளில் 30% அல்லது 40% ஆனவையே இவர்களுக்கு உரித்துடையதாக காணப்படுகின்றன. சிறிய அளவிலான காணிகளை வைத்திருப்பவர்கள் பெரும் பங்களிப்பைப் பெற்றுத் தரும்போது, பெரும் காணி உரிமைகளை வைத்திருக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அல்லது தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் நிறுவனங்கள் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகின்றன. இன்னும் லயன் அறைகளில் கஷ்டப்படும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி, அவர்களுக்கு மூலதனத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும்.

ஒரு வீடு போலவே, செய்கைகளுக்கான காணியும் கிடைக்கும். இவ்வாறு மேற்கொண்டால் அவர்களின் சம்பளப் பிரச்சினைக்குக் கூட இதனால் தீர்வு கிட்டும்.

பயன்படுத்தப்படாத காணிகளை இவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து, பெரும் எண்ணிக்கையிலான சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here