தோட்டத் தொழிலாளர்களையும் போராட்டத்தில் இணைக்கப் போவதாக உதயகுமார் எம்பி எச்சரிக்கை

Date:

2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அது மாத்திரமன்றி மின்சார கட்டணம், நீர் கட்டணம், போக்குவரத்து கட்டணம் என பல்வேறு கட்டணங்கள் உயர்ந்துள்ளது.

மேலும் புதிது புதிதாக வரிகள் அறவிடப்படுகிறது. எரிபொருள், கேஸ் விலை அதிகரித்துள்ளது. ஹோட்டல் உணவுகள் மற்றும் பேக்கரி உணவுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இப்படி அனைத்தும் விலை அதிகரித்திருக்கும் வேளையில் தொழிலாளர்களின் சம்பளம் மாத்திரம் அதிகரிக்காமல் உள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பள அதிகரிப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. அதன் பின்னர் எவ்வித சம்பள உயர்வும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் தனியார் துறை ஊழியர்கள் சம்பள உயர்வுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.

இதேபோல் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதியும் அரசாங்கமும் இதுகுறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அரச ஊழியர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இணையாக பெருந்தோட்ட தொழிலாளர்களையும் போராட்டக் களத்தில் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என அரசாங்கத்திற்குஹ எச்சரிக்கை விடுக்க விரும்புகிறோம்” என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...