ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மாஅதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க இதன் விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளன. இது குறித்து இராணுவ புலனாய்வுப் பிரிவினர் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் பதவிகள் சில, வெற்றிடமாகியிருந்தன. இதனால், விசாரணைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதால், மீண்டும் எக்னெலிகொட காணமலாக்கப்பட்ட வழக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
கிரித்தலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி உட்பட ஒன்பது இராணுவ புலனாய்வுப் பிரிவினர், இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
2010 ஜனவரியில் கிரித்தலே, ஹபரணை மற்றும் கொட்டாவ பகுதியில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று (30) மூன்று நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் உறுப்பினரான நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்து.
