வெளிநாட்டுத் தயாரிப்பான “ஸ்பிரே கண்’ (pepper spray) துப்பாக்கியை தமது தற்பாதுகாப்புக்காக வழங்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், கோரிக்கை விடுத்துள்ளார்.
மிளகு தோட்டாக்கள் பயன்படுத்தப்படும் இந்த கைத்துப்பாக்கி, நீண்ட தூரம் நீரைப் பீச்சியடிக்கக் கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் மாஅதிபருக்கு அர்ச்சுனா ராமநாதன் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
பாதுகாப்புக் காரணங்களுக்காக துப்பாக்கி வைத்திருக்க விரும்புகிறேன். இதற்கு பொலிஸ் மா அதிபரான நீங்கள் அனுமதிக்க வேண்டும்.வௌிநாட்டுத் தயாரிப்பான மிளகு துப்பாக்கி ஒன்றை நான், வாங்கியுள்ளேன்.
இதைக் கொண்டு வருவதற்கு சுங்கம் அனுமதிக்குமா என்பது எனக்குத் தெரியாது. துப்பாக்கியை வாங்கிய பின்னரே இதற்கான அனுமதி கிடைக்குமா என்பதைச் சிந்தித்தேன்
அரசாங்கம் பாதுகாப்பு தராதுள்ளதால்,என்னை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது.உள்நாட்டில் எனக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உணர்வதாலேயே,இந்த துப்பாக்கியை வாங்கியுள்ளேன்.இவ்வாறு அவரது கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், இலங்கை சுங்க விதிமுறைகளின்படி இதுபோன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன் அங்கீகாரம் தேவை என்பதை வாங்கும் நேரத்தில் தனக்குத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
