பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

0
1735

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக அத்திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது. 

இந்த நடிகைகள் கெஹெல்பததர பத்மேயுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பணச் சலவை அல்லது ஆயுதங்கள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நவம்பர் மாதம் 7ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here