17 அரச பல்கலைக்கழகங்கள், GMOH இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில்

0
79

சம்பளப் உயர்வு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் 17 அரச பல்கலைக்கழகங்களும் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

அரச சேவை தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) நாவல இலங்கை திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடத்திய கூட்டத்தை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம் மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி ஊவா மாகாணத்தில் இன்று காலை 08.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here