ஹம்பாந்தோட்டையில் 1.5 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தயாராகும் சினோபெக்

Date:

சீனாவின் சினோபெக் நிறுவனம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை மிகப்பெரிய முதலீடு செய்யத் தயாராகி வருகிறது.

இதன்படி, ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் சினோபெக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களில் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினோபெக்கிற்கு மேலதிகமாக, ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக விட்டோல் என்ற சிங்கப்பூர் நிறுவனமும் முன்னிலையில் இருந்தது, ஆனால் விட்டோல் விலகிய பின்னர், சினோபெக் திட்டத்தை பெறுகிறது. அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த விஜயத்தின் போது சினோபெக் நிறுவனத்தின் தலைவரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...

சஜித் தலைமையில் அவசர கூட்டம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் நேற்று (21)...

களு கங்கை ஆற்றைச் சுற்றி வெள்ள நிலை

இன்னும் சில மணி நேரங்களுக்குள் களு கங்கை ஆற்றைச் சுற்றிய பகுதிகளில்...

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...