மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலும் 10ஆயிரம் வீடுகள்; இந்தியா அறிவிப்பு

0
233

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் இன்று (நவம்பர் 02) பிற்பகல் ‘மலையகம் 200’ நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய போதே இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இவ்வாறு கூறினார்.

வீடமைப்புத் திட்டத்தின் ‘கட்டம் 3’ வெற்றியைப் பாராட்டிய அவர், இந்தியாவின் முதன்மையான அபிவிருத்தித் திட்டமாக இது உள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் கட்டித்தரப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

இந்திய வீட்டுத்திட்டத்தின் மூன்றாம் கட்ட வெற்றி குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர், திட்டத்தின் கீழ் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்ட 4,000 வீடுகளில் 3,700 வீடுகள் ஏற்கனவே பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

“இரு நாட்டு உறவில் தனிப்பட்ட முறையில் எனக்கும் இது ஒரு சிறப்பான தருணமாக உள்ளது.

‘நாம் 200’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திட்டத்தின் ‘4ம் கட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள 10,000 வீடுகளில் முதல் வீட்டுக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் சீதாராமன், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத ஆதரவை மேலும் எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here