மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி பலி

0
57

கெபித்திகொல்லாவ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் சார்ஜன்ட் பெண் ஒருவர் செலுத்திய காருடன் மோதுண்டு ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் பி. சுனில் சந்திரசிறி மிஹிந்தலை, நாமல்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் 08ஆம் திகதி அனுராதபுரம்-திருகோணமலை A12 நெடுஞ்சாலையில் வேலங்குளம சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மோதியதுடன், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய அம்பன்பொல பொலிஸ் WPS அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here