உள்ளூராட்சி நிறுவனங்களில் இதுவரை நியமனம் பெறாத 8400 பணியாளர்கள் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் அரசாங்கத்தின் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவிக்கின்றார்.
அவர்கள் 15 வருடங்கள் அல்லது அதற்கு மேல் சேவையில் இருப்பவர்கள் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
“மாகாண சபைகளில் 10,000 பணியாளர்களின் வெற்றிடங்கள் இருந்தன. பல்நோக்கு பணியாளர்களாக 6000 பேருக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம், 10ம் திகதிக்குள், மீதமுள்ள பணியிடங்களை, பல்நோக்கு வளர்ச்சி அலுவலர்களைக் கொண்டு நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், உள்ளூராட்சி மன்றங்களின் மதிப்பீட்டு முறைமை, குறைபாடுகளை செலுத்துதல் மற்றும் இடமாற்றம் போன்றவற்றின் இணையவழி முறைமை தொடர்பில் மென்பொருளைத் தயாரித்தல் அடுத்த 02 வாரங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் முதல் கட்டத்தின் கீழ், மத்திய மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்துதல் 30.11.2023 க்குள் தொடங்கப்பட உள்ளது.
மேலும், பதுளை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் கழிவு முகாமைத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் திட்டம் திண்மக்கழிவு பதப்படுத்துதல் மற்றும் சுகாதாரமான குப்பைகளை நிரப்பும் திட்டம் என்ற பெயரில் 2024 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.