திருகோணமலை சீனக்குடா பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்

0
20

திருகோணமலை, சீனக்குடா பகுதியில் நேற்று (02) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சீனக்குடா – கப்பல்துறை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை இலக்குவைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here