இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற 10 தமிழர்கள் கடலில் தவிப்பு

0
164

இலங்கையில் நிலவும் கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற நிலையில் இந்தியாவின் 3வது தீடை பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

மன்னார் ஊடாக  படகு வழியாக தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையின் கீழ் உள்ள 3வது தீடையில்   தரை இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இவர்களை அவதானித்த தமிழக மீனவர்கள்  கரையோர பொலீஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதேநேரம் தமிழகம் இராமேஸ்வரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் அதிக மழை பெய்வதனால் அகதிகள் நிற்கும் இடத்திற்கு மீட்பு படையினர் செல்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கொட்டும் மழையில் நனைந்தவாறு 7 மணிநேரமாக அகதிகள் கடலில் தவிப்பதாக கூறப்படுகின்றது.

  • VK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here