இன்றும் தபால் மூல வாக்களிப்பு

Date:

பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்றாகும் (04). இதன்படி, ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினை அளிக்க முடியாதவர்கள், முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்கினை இன்றும் அளிக்க முடியாத தபால்மூல வாக்காளர்களுக்கு நவம்பர் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் தமது பணியிடம் அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால்மூல வாக்கினை அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதனிடையே, வாக்குப்பதிவு மற்றும் விருப்பு வாக்கு குறித்து தெளிவுபடுத்தும் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கு உள்ளது, அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவிற்கு வழங்கப்படலாம்.வாக்கு அளிக்கப்படும் அரசியல் கட்சி அல்லது சின்னத்தின் முன் அல்லது சுயேச்சைக் குழுவின் எண் மற்றும் சின்னத்திற்கு முன் உள்ள இடத்தில் புள்ளடி அடையாளம் இடப்பட வேண்டும்.

அதன்பிறகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று வேட்பாளர்களுக்கு மேற்படாதவாரு விருப்பு வாக்கினை அளிக்க, ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒதுக்கப்பட்ட வரிசை எண் கொண்ட பெட்டியில் புள்ளடி அடையாளத்தை இடவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களுக்கு வாக்களித்திருந்தால் அல்லது வாக்குச் சீட்டில் ஏதேனும் குறியீடு வைக்கப்பட்டால், அந்த வாக்கு செல்லுபடியாகாது.

மேலும், வாக்குப்பதிவு மற்றும் விருப்பு வாக்கின் போது புள்ளடி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இன்னும் 10 வருடங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு கடினம்

வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறுகையில், நாட்டில் இன்னும்...

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...