புதிதாக 10 அமைச்சுப் பதவிகள் தயார் நிலையில்..!

0
131

தற்போதுள்ள அமைச்சுப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் வலுவான அரசாங்கத்தை நிலைநிறுத்துவது குறித்து அமைச்சரவை ஆலோசித்து வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

முப்பது அமைச்சுப் பதவிகளை நியமிக்க முடியும் என்றாலும் இதுவரை இருபது அமைச்சரவை அமைச்சுப் பதவிகளே வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 10 அமைச்சர் பதவிகள் தயார் நிலையில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்துள்ள பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சுப் பதவிகளை நிரப்பும் போது தற்போதுள்ள அமைச்சுப் பதவிகளில் சில திருத்தங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here