மலையகத்தில் தோட்டக் குடியிருப்புகளை கையகப்படுத்தும் திட்டம் இல்லை

0
66

” தோட்டத் தொழிலாளர்கள் இரு வாரங்கள் வேலைக்கு வராவிட்டால் தோட்ட குடியிருப்புகளை கையகப்படுத்தும் எந்தவொரு முடிவையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது ” கண்டி, உன்னஸ்கிரிய பகுதியில் அரசாங்க பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும் தோட்டமொன்றில் உள்ள, தோட்ட தொழிலாளர்களுக்கு முகாமையாளரால் கடிதம் அனுப்பட்டுள்ளது.

இரு வாரங்கள் தொடர்ச்சியாக வேலைக்கு வராவிட்டால் லயன் அறைகள் மீளப்பெறப்படும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது…” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” இந்த கடிதம் தொடர்பில் நான் தேடி பார்த்தேன். ஒரு அரச தோட்ட நிறுவனத்தின் தோட்ட அதிகாரியால் அனுப்பட்ட கடிதம் இது. அரசாங்கம் என்ற வகையில் நாம் அப்படியொரு தீர்மானத்தை எடுக்கவில்லை.
தோட்ட குடியிருப்புகளை கையகப்படுத்தும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. மேற்படி சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” – எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here