Sunday, September 8, 2024

Latest Posts

அர்ஜுனவுக்கு அமைச்சர் பதவியை வழங்கவும் நான் தயார்

அர்ஜுன ரணதுங்க எந்த கட்சியிலிருந்து தேசியப்பட்டியல் ஊடாக முன்வந்தாலும் அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கவும் தான் தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இடைக்கால கட்டுப்பாட்டு குழு அமைப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டிய விஷயங்கள் உள்ளன. இடைக்கால கட்டுப்பாட்டு குழுவினை நிறுவுவதற்கு தேவையில்லை. அதன்படி, எனக்கு இருக்கும் அதிகாரத்தின்படி நான் முடிவு எடுத்துள்ளேன். அமைச்சரவையில், அரசியலமைப்பு திருத்தம் செய்ய, ஒரு குழு நியமிக்கப்பட்டது. அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அனைத்து வீரர்களையும் அழைத்து இது தொடர்பாக கருத்துக்களை எடுக்க வேண்டும்.

அமைச்சர் இருக்கும் வரை பணிகள் நடக்கும். அமைச்சர் பதவியை காப்பாற்ற மறைவதில் அர்த்தமில்லை. நாட்டின் பொறுப்பு எனக்கு இருக்கிறது. பொலன்னறுவை அப்பாவி மக்கள் சரியானதைச் செய்யவே என்னை நியமித்தனர். அந்த பொறுப்பை சரியாக செய்கிறேன். ஜனாதிபதி விரும்பினால் என்னை பதவியில் இருந்து நீக்கலாம். அது அவருடைய தீர்மானம்.

தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அர்ஜுன் பெயரை முன்வைக்க காரணங்கள் உள்ளன. உலகக் கிண்ணத்தினை கொண்டு வந்திருக்கிறார். அவர் ஓய்வு பெரும் போது கூட இரண்டாவது குழுவினை உருவாக்கிச் சென்றார். மேலும், முரளிதரனுக்கு பிரச்சினைகள் வந்தபோது சவால் விடுத்தார். அதுதான் தலைமைத்துவம். அவருக்கு யாரும் இடம் கொடுக்கவில்லை. அவர் இந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட போது அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. விளையாட்டு அமைச்சராக என்னை விட பத்து மடங்கு சிறந்தவர் இருக்கிறார் என்றால் அது அர்ஜுன் தான் என்பேன். அர்ஜுன் எந்தக் கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டாலும் தேசியப் பட்டியலில் இருந்து அமைச்சர் பதவியை வழங்க நான் தயார். கிரிக்கெட் மூலம் இலங்கைக்கு கெளரவத்தை ஏற்படுத்திய அம்மனிதனுக்கு தலைமைத்துவத்தினை வழங்காது வேறு யாருக்கு வழங்க வேண்டும்? நான் அந்த முடிவை எடுத்தேன்.”

இந்த நாட்களில் இலங்கையில் கிரிக்கட் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று (06) பல தீர்மானங்கள் எட்டப்பட்டன.

அப்போது, ​​இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடைக்கால ஆட்சிக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் மறுதேர்தல் நடைபெறும் வரை அல்லது மறு அறிவித்தல் வரை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை நடத்துவதற்கு இந்த இடைக்கால குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும் என குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால விவகாரங்கள் மற்றும் அது தொடர்பான வர்த்தமானி தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.