பாடசாலை மாணவர்களைத் தாக்கிய மூன்று இராணுவச் சிப்பாய்கள் கைது!

0
45

பாடசாலை மாணவர்கள் இருவரைத் தாக்கிச் சித்திரவதை செய்தனர் எனக்  கூறப்படும் மூன்று இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 11  இல் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரது சகோதரனுக்கும் தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here