ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாகத்தை பாதுகாக்க சிலர் முயற்சி – சஜித்

0
48

கிரிக்கட் நிர்வாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்ந்து அதனை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவிற்கு 14 நாட்களுக்கு தடை விதிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இது சாத்தியமா? இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உடனடியாக நாடாளுமன்றத்தில் சரியான விளக்கத்தை வெளியிட வேண்டும் எனஎதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கெளரவ நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எக்காரணம் கொண்டும் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் முன்னெடுத்து வரும் முரண்பாடான தீர்மானங்களினால் கிரிக்கெட் விளையாட்டு தற்போது பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாகத்தை பாதுகாக்க அரசாங்கத்தில் உள்ள சிலர் முயற்சித்து வருகின்றனர்.

இலங்கையின் எதிர்கால கிரிக்கெட்டுக்காக அனைவரும் பொதுவான கண்ணோட்டத்தில் செயற்படுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய கூட்டு நடவடிக்கைக்கு தாம் பூரண ஆதரவு வழங்குவதாகவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here