ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் இம்மாதம் 13ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.