இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை நீக்குவது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்த பிரேரணைக்கு ஆளும் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால அனுமதியளித்துள்ளார்.
ஊழலற்ற நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் பேணுவதற்கு கிரிக்கெட் நிர்வாகத்திற்கு புதிய சட்ட முறைமையொன்றை மேற்கொள்வதே முன்மொழிவாகும்.