இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க டில்லி-வாஷிங்டன் திட்டம்!

0
147

இலங்கைத் தலைநகரில் இந்தியச் செல்வந்தரான கௌதம் அதானி அமைத்துவரும் துறைமுக முனையத்திற்கு அமெரிக்கா 553 மில்லியன் டொலர் (S$750 மி.) நிதி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க புதுடெல்லியும் வாஷிங்டனும் முயன்றுவரும் வேளையில், அண்மைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அனைத்துலக மேம்பாட்டு நிதி நிறுவனம் (டிஎஃப்சி) வழங்கவிருக்கும் நிதி, இலங்கையில் பெய்ஜிங்கின் செல்வாக்கைத் தளர்த்துவதற்காக மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்க, இந்திய முயற்சிகளை மறுவுறுதிப்படுத்துகிறது.

சென்ற ஆண்டு இலங்கை சந்தித்த பொருளியல் மந்த நிலைக்கு முன்னர், துறைமுகத்திற்காகவும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காகவும் செலவிட கொழும்பு சீனாவிடமிருந்து அதிக அளவில் கடன் வாங்கியது.

கொழும்பில் உள்ள துறைமுக முனையம், அந்த அமெரிக்க நிறுவனம் ஆசியாவில் செய்யவிருக்கும் ஆகப் பெரிய உள்ளமைப்பு முதலீடாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

அது இலங்கையின் பொருளியல் வளர்ச்சியையும், இந்தியா உள்பட அதன் வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தும் என்று டிஎஃப்சி அதன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் துடிப்புடன் இருப்பது அமெரிக்காவுக்கு முக்கிய முன்னுரிமை என்று டிஎஃப்சியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் நேத்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

கொழும்பு துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் ஆக பரபரப்பானது. அது, அனைத்துலகக் கப்பல் பயணப் பாதைகளுக்கு அருகில் இருப்பதே அதற்குக் காரணம்.

கிட்டத்தட்ட பாதி கொள்கலன் கப்பல்கள் அதன் நீர்ப்பகுதியைக் கடந்துசெல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here