போகம்பறை சிறைச்சாலைக் கட்டடம் தலதா மாளிகைக்கு வழங்க ஏற்பாடு

0
178

கண்டி – போகம்பறை சிறைச்சாலைக் கட்டடத்தை தலதா மாளிகைக்கு அல்லது முதலீட்டுத் திட்டத்திற்கு வழங்குவதை விரைவுபடுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திருத்தியமைக்கப்பட்ட கண்டி போகம்பறை சிறைச்சாலைக் கட்டடத்திற்கு செலவான பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனை தலதா மாளிகைக்கு வழங்குவதற்கு அல்லது வேறு முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், பாராளுமன்றத்தில் நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இந்த பணிப்புரைகளை விடுத்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here