பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை

0
206

இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு அமெரிக்க தூதரகத்திடம் கோரியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் கடந்த அக்டோபர் 23 ஆம் திகதியன்று எச்சரிக்கையை வெளியிட்டது.

இந்த அச்சுறுத்தல் காரணமாக, மறு அறிவித்தல் வரை அகம்பைப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here