தெமட்டகொட வெலுவன வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த வீடு தற்போது சிறையில் உள்ள தெமட்டகொட ருவானின் வீடு என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இத்தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.