பொதுத் தேர்தல் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையில் 20 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ரஷ்யா, தாய்லாந்து, தெற்காசிய நாடுகளின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதானிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்து பின்னர் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை இவர்கள் தொடங்க உள்ளனர்.
இதேவேளை, ANFREL சர்வதேச அமைப்பின் கண்காணிப்பாளர்கள் குழு நேற்றுமுன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்து தமது தேர்தல் கண்காணிப்பு கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு அப்பால் உள்நாட்டிலும் பெவ்ரல், கபே உட்பட பல அமைப்புகள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.