அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி நீக்கம் – வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

0
6

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தகப் பண்ட வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த வரிக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்தார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மீதான ஒரு கிலோகிராமுக்கான வரி 100 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும், கருவாடு (மாசி) மீதான ஒரு கிலோகிராமுக்கான வரி 202 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், தூள் செய்யப்பட்ட மற்றும் தூள் செய்யப்படாத உலர்ந்த மிளகாய் மீதான ஒரு கிலோகிராமுக்கான விசேட வர்த்தகப் பண்ட வரியும் 50 ரூபாவாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here