நடிகைகள், மனைவி, மச்சான், மகள்கள் என உறவுகளுக்கு கிரிக்கெட் விசா கடிதம் கொடுத்த இலங்கை கிரிக்கெட்!

0
201

2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக் கிண்ணப் போட்டியைக் காண, கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் ஜயந்த தர்மதாஸவினால், ஷலனி தாரக மற்றும் அனுராதா எதிரிசிங்க ஆகிய இரு நடிகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான முரண்பாடான அறிக்கை தொடர்பில் நேற்று கோப் குழு வந்த போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

அங்கு கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி டி சில்வா, உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாகவே தனது மனைவி அவுஸ்திரேலியாவில் இருந்ததாகவும், அந்த போட்டியின் காரணமாக அவருக்கு விசா கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தனது மைத்துனர் உள்ளிட்ட நண்பர்கள் குழு போட்டிகளைக் காண அவுஸ்திரேலியா செல்ல விசா பெற கடிதம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் இரண்டு மகள்களுக்கும் உரிய விசா கடிதங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here