வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியே தேவை – நிதி அல்ல

0
135

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர்.

நீதியே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை இதனை தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அவர் பாதுகாப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்காகவே நாங்கள் 14 வருடங்களாக நீதி கேட்கின்றோம்.

எங்களுக்கு அரசாங்கம் ஒதுக்குகின்ற பணம் தேவையில்லை நீதியே வேண்டும்.காணாமல்போன ஆக்களுக்கு ஒதுக்கிய பணத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த கடத்தப்பட்டவர்களுக்கு வழங்குங்கள் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here